1. Home
  2. தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமா தான் போலீசார் அஜித்தை கொலை செய்துள்ளனர் - அதிமுக முன்னாள் அமைச்சர்..!

1

அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில், அஜித்குமார் மரணம் கொடூர கொலை, தமிழக அரசு ஒரு குடிமகனை கொன்றிருக்கிறது என நீதிபதியே கருத்து தெரிவித்திருக்கிறார். நீதியை காப்பாற்ற வேண்டிய முதலமைச்சரே நீதித் தவறை செய்திருக்கிறார், 

எப்படி நீதி தவறிய பாண்டிய நெடுஞ்செழியன், மணி முடியை துறந்தாரோ, அதேபோல் தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தான் காவல்துறை தனிப்படை மூலம் 100 சவரன் கொள்ளை அடித்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு 9 சவரன் நகைக்காக அழுத்தம் காரணமாக காவல்நிலையத்தில் விசாரிக்காமல் தனியிடத்திற்குள் வைத்து விசாரணை என பெயரில் கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் யார் அந்த அழுத்தம் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை போதாது, மேலும் இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேட்டி அளித்தார்.

Trending News

Latest News

You May Like