1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த காவலர் சிறையில் அடைப்பு !

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த காவலர் சிறையில் அடைப்பு !


சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அருண். இவர் சென்னை வேப்பேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அருண் கஞ்சா கடத்துவதாகவும், அதனை பலருக்கும் விற்பனை செய்து வருவதாகவும் சென்னை காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் அருண் கஞ்சா விற்பனை செய்வதை உறுதி செய்தனர். இதனையடுத்து, அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ஒன்னறை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, போலீஸ்காரர் அருண்பிரசாத் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், காவலர் அருணுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆட்டோ டிரைவர் குமார் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த இவர்களுடன் 17 வயது சிறுவன் ஒருவனும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீஸ் ஒருவரே கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like