1. Home
  2. தமிழ்நாடு

வழக்கறிஞர் வெட்டிக் கொலை – போலீஸார் விசாரணை!

Q

பரமக்குடியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் வழக்கறிஞராக இருந்து வந்தார். பரமக்குடி பகுதியில் அரசு ஒப்பந்தப்பணிகளும் செய்து வந்தார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையில் ராமநாதபுரம் மாவட்டம் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொலை வழக்கில், உத்திரகுமார் சிறையில் இருந்துவிட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like