1. Home
  2. தமிழ்நாடு

காவல் ஆய்வாளரின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் ! பொது மக்கள் வரவேற்பு !

காவல் ஆய்வாளரின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் ! பொது மக்கள் வரவேற்பு !


அரியலூர் - செந்துறை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பொதுமக்களிடம் காட்டி காவல் ஆய்வாளர் ஒருவர் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த பலரது புகைப்படங்களை ஆய்வாளர் மதிவாணன் தனது செல்போனில் பொதுமக்களிடம் காட்டி விளக்கினார்.

பெரும்பாலான விபத்துக்களில் இழந்தவர்கள் ஹெல்மெட் அணியாததாலும் சாலை விதிகளை முறையாக பின்பற்றாததாலும் மது போதையில் வாகனங்களை இயக்கிய தானே உயிரிழந்து உள்ளனர் என மக்களுக்கு எடுத்துக் கூறினார்.மேலும், சாலையில் செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் தலைக்கவசம் அணிய வேண்டும் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் தனது செல்போனில் ஏற்கனவே நடந்த விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் புகைப்படங்களை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டினார். காவல் ஆய்வாளரின் இந்த நூதன பிரசாரம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Trending News

Latest News

You May Like