நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி..!
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில் அதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறையினர் 21 கேள்விகள் கேட்டதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விளக்கத்தை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டதாகவும் சற்றுமுன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்