த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி..!
காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜயும் கண்டனம் தெரிவித்து உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் ஜூலை 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தார்.
போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜூலை 6ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க., தரப்பு முறையிட்டது. ஆனால் அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியதால், போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.
இந் நிலையில், சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க., தொடர்ந்த வழக்கில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவை அடுத்து,தற்போது காவல்துறையும் போராட்டம் நடத்த உரிய அனுமதியை வழங்கி உள்ளது. ஆனால் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நடத்தாமல் சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.