காவல் ஆணையர் விளக்கம் : எஃப்.ஐ.ஆர் இந்த வழிகளில் லீக் ஆகியிருக்கலாம்..!
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் இன்று (26.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலத்தை எப்படிக் கொடுக்கிறார்களோ அப்படிப் பதிவு செய்யப்படுவது தான் எஃப்.ஐ.ஆர். ஆகும். அதன்படி தான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ. ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகு விசாரணையைத் தொடர்ந்தோம். கோட்டூர்புரம் காவல் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பொறுப்புகளை ஒப்படைத்து விசாரிக்கிறோம். சந்தேகப்பட்ட நபர்கள் சிலரை விசாரித்தோம். ஆதாரப்பூர்வமாக டவர் லொகேஷன் போன்றவற்றைக் கண்டுபிடித்து அடுத்த நாள் காலையில் 25ஆம் தேதி குற்றவாளியைப் பிடித்து விட்டோம். அதன் பின்பும் குற்றத்தைச் செய்ததை உறுதிப்படுத்துவதற்காக மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்திய பின்பு ரிமாண்ட் செய்தோம். இதுதான் இந்த வழக்கில் நடந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மற்ற சில குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்போது சி.சி.டி.நெஸ் ஆட்டோமேட்டிக்காகவே இணையத்தில் முடக்கப்பட்டுவிடும். ஐ.பி.சி. சட்டமானது, பி.என்.எஸ்.சட்டமாக மாறும்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆரை முடக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தாமதமான நேரத்தில் ஒரு சிலர் எஃப்.ஐ.ஆரை பதிவேடு பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வழியாக இந்த எஃப்.ஐ.ஆர். வெளியாகி இருக்கலாம் எந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும். அது கட்டாயம் ஆகும். இந்த இரண்டு வழிகளில் தான் ஏதாவது ஒரு வழியில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். வெளியில் வரக்கூடாது. இது மாதிரி வெளியிடுவது சட்டப்படி குற்றம். அவ்வாறு வெளியான எஃப்.ஐ.ஆரை கொண்டு பெரிய அளவில் விவாதம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை எந்த வகையிலும் தெரிய கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கக்கூடிய தகவல்களை வைத்துப் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்ற அளவில் தகவல் கொடுப்பதும் தவறாகும். அதனால் அது மாதிரி கொடுக்கப்பட்ட தகவல்களை வெளியே தெரியவந்துள்ளதால் எஃப்.ஐ.ஆரை வெளியிட்டது தொடர்பாக கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார் என்பது குறித்துக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும்.
Online ல் FIR பதிவு செய்யப்பட்டிருக்கும் அதனை சில பேர் பார்த்திருக்கிறார்கள் பதிவிறக்கம் செய்திருப்பார்கள். அவர்கள் மூலமாக வெளியே சென்றிருக்கலாம். ஆனால் மாலை வரை சென்னை காவல்துறை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை என சென்னை காவல்துறை தெரிவித்து வந்தது.ஞானசேகரன் மீது சென்னையில் 2013-ல் இருந்து 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பெண்ணை பாலியல் சீண்டல் செய்த பழைய வழக்குகள் எதுவும் இல்லை.
அவர் எந்த கட்சி காரர் என்பது கவலையில்லை... குற்றம் நடக்கும்போது ஞானசேகரனின் மொபைல் flight modeல் இருந்துள்ளது. குற்றவாளி யாரிடமும் போனில் "சார்" எனப் பேசவில்லை. மிரட்டுவதற்காக அப்படிச் சொல்லியுள்ளான்.
கடந்த 2013 முதல் ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் சென்னை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது பெண்களை வன்கொடுமை செய்தது போன்ற வழக்குகள் இல்லை. இதுவரை ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக வேறு எந்த பெண்களும் புகார் தரவில்லை. ஞானசேகரன் வேற எதுவும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சி.சி.டி.வி. கேமராக்க்கள் உள்ளன. அதில் 56 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனை ஆதராமாக கொண்டு தான் குற்றவாளியை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி நன்றாக உள்ளார். இந்த மாணவி போன்று எந்தவித குற்றம் நடந்தாலும் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.