துரத்திய போலீஸ்… ஆற்றில் குதித்த இளைஞர்கள்.. ஆனால்!

போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய இளைஞர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது.
அஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம் தேடேலிசாரா கிராமத்தைச் சேர்ந்த தேபாசிஸ் தாஸ் என்ற இளைஞர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தெரிகிறது.
அவர் தனது நண்பர்களுடன் கோவிலில் அமர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனையடுத்து போலீஸாரிடமிருந்து தப்பிக்க இளைஞர்கள் தெறித்து ஓடினர். அப்போது தேபாசிஸும், அவருடைய நண்பர்கள் நான்கு பேரும் ஆற்றில் குதித்தனர்.
நான்கு பேர் தப்பித்து அடுத்தபக்கம் கரை சேர்ந்தபோது தேபாசிஸை மட்டும் காணவில்லை.அதனைத் தொடர்ந்து ஆற்றில் தேடிய போலீஸார் தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்புக்குழுவினரின் உதவியுடன் அவரது உடலை ஆற்றில் இருந்து மீட்டனர்.
இதனையடுத்து கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in