பாஜக - விசிக நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி : பதற்றத்தில் சென்னை !
பாஜக - விசிக நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி : பதற்றத்தில் சென்னை !

பெண்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் புகார் தெரிவிக்கின்றனர். மனுநீதியில் எழுதியிருந்ததை குறிப்பிட்டு பேசியதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
ஆனால், மாநில அளவில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் பாஜக மகளிர் அணியினரும் போராட்டம் அறிவித்தனர். குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனிடையே போராட்டம் சென்னை முட்டுக்காடு அருகே நடத்த முயன்ற குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விசிக தர்ணா போராட்டம் நடத்தினர். விடுதி தடுப்பை விசிகவினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும், அங்கு பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்ட்டது. இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால், சென்னையில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட பாஜக மற்றும் விசிக நிர்வாகள் முடிவு செய்துள்ளதால் சென்னை நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.