1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கொடைக்கானல் மலையில் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை..!

1

கொடைக்கானலில் மணல் அள்ளும் இயந்திரம், போர்வெல், கம்ப்ரசர் மூலம் பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு மலைத்தள பாதுகாப்பு விதிப்படி கலெக்டராக இருந்த வள்ளலார் தடை விதித்தார். இந்நடைமுறை தற்போது வரை தொடர்கிறது. இருந்த போதும் வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆசியுடன் விதிமீறல்கள் நடந்து வருகின்றன.
 

மண்வளம் மற்றும் இயற்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் கனரக இயந்திர பயன்பாடால் இயற்கை பேரிடர் ஏற்படும் அபாயமும் உள்ளது.
 

இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு சில மாதங்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இருந்தாலும் இதன் பயன்பாடு ஜோராக நடக்கிறது. தற்போது இதை தடுக்கும் நோக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

இதுகுறித்து ஆர்.டி.ஓ., கூறியதாவது: அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக வணிக ரீதியாக மண்வளம் மற்றும் இயற்கைவளம் சிதைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 

இதனடிப்படையில் கனரக இயந்திரங்கள் மணல் அள்ளும் இயந்திரம், போர்வெல், கம்ப்ரசர் மூலம் பாறை தகர்ப்புக்கு தடை ஏற்கனவே உள்ளது.
 

தற்போது அனுமதியின்றி கனரக இயந்திர பயன்பாடு இருக்கிறது. கலெக்டர் உத்தரவின்படி விதிகளை மீறிய 15 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூன் 30க்குள் இத்தகைய கனரக வாகனங்கள் மலைப்பகுதியில் இருந்து இறக்க வேண்டும்.
 

மீறும் பட்சத்தில் ஜூலை 1 முதல் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
 

வருவாய்த்துறையினர் இவ்விஷயத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இயற்கை வளம் மீட்டெடுக்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News

Latest News

You May Like