1. Home
  2. தமிழ்நாடு

நாளைக்குள் பணம் திருப்பிச் செலுத்தாவர்களின் அரசு சலுகைகள் ரத்தாகுமா? காவல் நிலையத்தில் புகார்!

நாளைக்குள் பணம் திருப்பிச் செலுத்தாவர்களின் அரசு சலுகைகள் ரத்தாகுமா? காவல் நிலையத்தில் புகார்!


பிரதமரின் கிஷான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல் இருப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்ககிரி காவல் நிலையத்தில் வேளாண் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் பலரது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.இதனையடுத்து, அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர். இதில், வேளாண், தோட்டக் கலை, வருவாய் மற்றும் காவல்துறை உள் ளிட்ட துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைக்குள் பணம் திருப்பிச் செலுத்தாவர்களின் அரசு சலுகைகள் ரத்தாகுமா? காவல் நிலையத்தில் புகார்!

இந்த நிலையில், மோசடியாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தியவர்கள் போக, மற்றவர்கள் தாங்கள் பெற்ற பணத்தை வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்த மறுத்து வருவதாக கூறப்படுகிறது.பணம் செலுத்த அக்-டோர் 20-ம் தேதி என கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும், பலர் பணம் செலுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக பணத்தை திருப்பி செலுத்தாத 243 நபர்கள் மீது சங்ககிரி காவல் நிலையத்தில் சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் தேசிங்குராஜன் புகார் அளித்துள்ளார். இதனால் புகாருக்கு உள்ளானாவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாளைக்குள் இவர்கள் பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், அரசு சலுகைகள் அனைத்தும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

Trending News

Latest News

You May Like