1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தேலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை..!

1

விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 21ஆம் தேதி ஆகும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி ஏற்கனவே அறிவித்தது. அதன்படி அன்னியூர் சிவா திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி அக்கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like