1. Home
  2. தமிழ்நாடு

மகனது தலைவர் பதவியையும் பறித்துக்கொண்டார் பாமக ராமதாஸ்..!

Q

இன்று (ஏப்ரல் 10) மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்து கொண்டார். இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக, அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். பா.ம.க.,கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்.
நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. பதவி பெறும் ஆசை எனக்கில்லை. தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Trending News

Latest News

You May Like