விரைவில் நல்ல செய்தி வரும் - பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி..!

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது : விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அன்புமணி, ராமதாஸ் ஆகிய இரு தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம்.
தைலாபுரம் வந்த அன்புமணி- ராமதாஸ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. கட்சிக்கு அப்பாற்பட்ட சிலரும் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த சந்திப்புகள் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வரும் ஜூன் 8ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகையின் போது பா.ஜ.,- பா.ம.க., கூட்டணியை உறுதி செய்ய பேச்சுவார்த்தையா என்ற கேள்விக்கு, ஜி.கே.மணி பதில் தர மறுப்பு தெரிவித்தார்.பின்னர் அவர், ''அரசியலில் என்ன நடக்கும் என்பதை பற்றி ஆரூடம் கூற முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'', என்றார்.