1. Home
  2. தமிழ்நாடு

பாமக பொதுக்குழுவில் 1 லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

1

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

19 தீர்மானங்கள் விவரம்:

01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்டு வரை பதவியில் நீடிப்பார்கள்.அன்புமணி ராமதாஸ், பொது செயலாளர் வடிவேல் ராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் அடுத்த ஆண்டு 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடர்வார்கள்.

02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்.

03 :தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அதே நாள் விடுதலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்

04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.

05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.

06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்.

07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.

09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.

12 : காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!

13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

15 :9000 உதவி பேராசிரியர்கள் மற்றும் நியமிக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும்

16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. அரசுக்கு கண்டனம்.

17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Trending News

Latest News

You May Like