பாட்டு பாடி பதில் கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ்..!

சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,
பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தேன்.
பின்னர், ”பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்” எனக் கூறினார். மேலும், அன்புமணி உங்களிடம் மன்னிப்பு கேட்பதாக மேடையில் தெரிவித்துள்ளார், உங்களிடம் நேராக கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு ‘போகப் போகத் தெரியும்’ என பாடல் பாடி பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.ராமதாஸின் இந்த பதில், கட்சியின் உள் விவகாரங்களை திமுக மீது பழி போடுவதற்கு பதிலாக, உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என அன்புமணிக்கு மறைமுகமாக அறிவுறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.