1. Home
  2. தமிழ்நாடு

அரிசி, மளிகை சாமான், வேட்டி, சேலை, மது, பிரியாணி கொடுத்து திமுக வெற்றி - பாமக நிறுவனர் ராமதாஸ்..!

11

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில வெற்றி பெற்றார்..

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏக்களும் விக்ரவாண்டியில முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர்.தினமும் டோக்கன் வழங்கி ரூ. 300 முதல் ரூ. 500 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது.அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது.

ஒரு வாக்குக்கு ரூ. 10000 வரை திமுக வழங்கியுள்ளது. திமுகவின் ரூ. 250 கோடிக்கு கிடைத்த வெற்றி.அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 32ஆயிரம் வாக்குகளைவிட, தற்போது 75 சதவீதம் வாக்கு அதிகம் பெற்றுள்ளோம். உண்மையான வெற்றி பாமகவுக்கு கிடைத்துள்ளது. பாமகவுக்காக பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Trending News

Latest News

You May Like