1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்கான பாமக வேட்பாளர் அறிவிப்பு..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி திடீரென மறைந்ததைத் தொடா்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும் நாம் தமிழர் கட்சியும் அறிவித்துவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பாஜக போட்டியிடுமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, “எங்கள் கூட்டணி சார்பில் பாமக களமிறங்கும்,” என்றார்.

அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக சார்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுகிறாா் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

அறிவிப்பு வெளியானதும் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை பாமக நிறுவனர் ராமதாஸை வேட்பாளர் சி.அன்புமணி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Trending News

Latest News

You May Like