பிரதமர் மோடி இன்று ரஷ்யாவுக்கு பயணம்..!

ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் இன்று 8-ம் தேதி பிரதமர் மோடி மாஸ்கோ செல்கிறார். அங்கு அவர் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் அதிபர் புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இதன் பிறகு நாளை 9-ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டு வர்த்தகர்களையும் சந்திக்கும் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அங்கிருந்து 10-ம் தேதி பிரதமர் மோடி தாயகம் கிளம்புகிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார்.