1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா பயணம்..!

1

அடுத்த மாதம் ரஷிய நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷிய நாட்டின் அரசு ஊடகத்தில், பிரதமர் மோடியின் பயணத்தின் போது ரஷிய அதிபர் விளாதிமீா் புதினை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமே பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் ரஷியாவுக்கு மோடி பயணம் மேற்கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், ரஷியாவில் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக தொடர்ந்து 5-வது முறையாக புதின் பதவியேற்ற நிலையில், இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றுள்ளார். இந்த பயணத்தின் போது உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷிய - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ரஷியாவுக்கு மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னதாக, கடைசியாக 2019-ஆம் ஆண்டு ரஷியாவுக்கு சென்றிருந்தார். ரஷிய அதிபர் புதின், கடந்த 2021-ஆம் ஆண்டு ரஷியா-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இருப்பினும், மோடியின் பயணத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ, ரஷிய அரசோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Trending News

Latest News

You May Like