1. Home
  2. தமிழ்நாடு

3 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி..!

1

அரசு முறை பயணமாக ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 8 மற்றும் 9-ம் தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா - ரஷியா இடையிலான ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அத்துடன், மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் ஆஸ்திரியா செல்கிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரிய நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Trending News

Latest News

You May Like