புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயும், மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி சற்றுமுன் காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதே நாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.
மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#JUSTIN | மதுரை-பெங்களூரு, சென்னை-நாகர்கோவில் இடையே புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி#NarendraModi #VandeBharatTrain #IndianRailways #Chennai #Madurai #SparkMedia pic.twitter.com/84NKpY1fm9
— Spark Media (@SparkMedia_TN) August 31, 2024