ஸ்ரீல கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!
இஸ்கான்) மேலாண்மை குழு ஆணையர் ஸ்ரீல கோபால் கிருஷ்ணா கோஸ்வாமி மகாராஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “ஸ்ரீல கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜா மதிப்பிற்குரிய ஆன்மிக ஆளுமையாக திகழ்ந்தவர். கடவுள் கிருஷ்ணரின் மீது கொண்ட மாறாத பக்தி மற்றும் இஸ்கான் மூலம் அவர் மேற்கொண்ட ஓய்வறியாத சேவைக்காக உலகளவில் மதிக்கப்பட்டவர். அவரது போதனைகள் பக்தி, இரக்கம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இஸ்கானின் சமூக சேவையை குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் ஆகிய துறைகளில் விரிவிப்படுத்தியதில் அவரின் பங்கு அளப்பரியது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் பக்தர்களைச் சுற்றியுள்ளது. ஓம் சாந்தி” என மோடி பதிவிட்டுள்ளார்.
Srila Gopal Krishna Goswami Maharaja was a revered spiritual icon, globally respected for his unwavering devotion to Bhagwan Shri Krishna and his tireless service through ISKCON. His teachings emphasized the importance of devotion, kindness and service to others. He also played a… pic.twitter.com/OzQgOkmxpq
— Narendra Modi (@narendramodi) May 5, 2024