1. Home
  2. தமிழ்நாடு

பிபேக் டெப்ராய் மறைவு - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

1

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ராய் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 69.

பிபேக் டெப்ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிபேக் டெப்ராய் ஜி ஒரு சிறந்த அறிஞர். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்.

அவரது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் பரப்பில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். பொது கொள்கைகளுக்கான தனது பங்களிப்புகளைத் தாண்டி, நமது பழங்கால இலக்கியங்களில் பணியாற்றுவதிலும், அவற்றை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் பிபேக் டெப்ராயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like