1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ஒத்திவைப்பு..!

1

பிரதமர் மோடி தேசிய ஜனநாய கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார்.

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்கு பயணம் சென்றார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியது. சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.மேலும், மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பது உள்ளிட்ட ரயில்வே சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக இருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

வரும் 20 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மோடியின் சென்னை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோடி தமிழகம் வருகை தரும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு வருகை தந்து சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, பேசின் பிரிட்ஜ் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிமனை, ஆரால்வாழ்மாெழி - நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டை வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல், நாகர்கோவில் டவுண் - நாகர்கோவில் சந்திப்பு - கன்னியாகுமரி இடையே நிறைவடைந்த இரட்டை வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் போன்றவற்றை கானொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார். திடீரென இந்தப் பயணம் தற்பொழுது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like