1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி அறிவித்த திட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கப்படும்: நிர்மலா சீதாராமன்..!

1

 ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூருக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

“வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் நிலவலாம். ஆனால், இந்தியாவின் கைவினைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம்.

“அற்புதமான கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகழகான பொருள்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். இத்தகையவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம்.

“ஏனெனில், நமது நாட்டின் மென்திறன் இத்தகைய கைவினைக் கலைஞர்களிடம் இருக்கிறது. நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தை அவர்கள்தான் தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள். அவர்களுக்குத் துணைபுரியக் கூடிய விஸ்வகர்மா திட்டம் அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்கப்படும். அந்த வகையில் ரகுராஜ்பூருக்கு வந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

விஸ்வகர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தச்சர், பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை தயாரிப்போர், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவைத் தொழிலாளர், தையல் கலைஞர் போன்றோருடன், படகுத் தயாரிப்பு, ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, மீன்பிடி வலை தயாரித்தல் என 18 வகையான பாரம்பரியத் தொழில்களை, பாரம்பரியமாக அல்லது குரு-சிஷ்ய முறைப்படி மேற்கொள்ளும் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளை பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் வழங்கும்.

இவர்களுக்கு இத்திட்டம் மூலம் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டையுடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை 5 விழுக்காடு தள்ளுபடி வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் திறன்களையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like