1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறந்தநாள் : ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

1

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கருணாநிதிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில், "கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.  நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி இந்த பதிவுடன் தமிழகம் வந்து கருணாநிதியை சந்தித்த போது எடுத்த புகைபடத்தை இணைத்துள்ளார். 



 

Trending News

Latest News

You May Like