1. Home
  2. தமிழ்நாடு

வரும் 22 ம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்..!

1

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டு தலமான கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி மராட்டிய மாநிலம் சென்றுள்ளார். அங்கு சோலாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 15 ஆயிரத்து 24 வீடுகளை பயனாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பு என்ற கோஷம் நமது நாட்டில் நீண்டகாலமாக உள்ளது. ஆனால், வறுமை தொடர்ந்து இருக்கிறது. வறுமையை ஒழிக்க என் தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் வரும் 22ம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். மக்கள் ஏற்றும் ராமஜோதி விளக்கு அவர்களின் வாழ்வில் இருந்து வறுமையை அகற்ற உத்வேகமாக இருக்கும்' என்றார்.

Trending News

Latest News

You May Like