அனைவரும் விலங்குகள் மீது கருணையுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்..!

பிரதமர் மோடி, குஜராத்தில் அவர் கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்று லயன் சவாரி பயணத்ததையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் ஜாம் நகரில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு உள்ள 'வன்தாரா' விலங்குகள் நலவாழ்வு மையத்திற்கும் சென்று, அங்கு பராமரிக்கப்படும் விலங்குகளை பார்வையிட்டார். பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வன்தாராவில், ஆசிட் வீச்சால்பாதிக்கப்பட்ட யானையை பார்வையிட்டேன். அந்த யானைக்கு நல்லசிகிச்சை அளிக்கப்படுகிறது. வேட்டைக்காரர்களால், கண் பார்வை பறிபோன யானைகளும் அங்கு உள்ளன.டிரக் மோதியதில் காயமடைந்த யானையும் அங்கு உள்ளது. இது போன்ற விஷயங்கள், விலங்குகள் மீது எப்படி கொடூரமாகவும், கவனக்குறைவாகவும் இருக்க முடியும். இந்த பொறுப்பற்ற தன்மைக்கு முடிவு கட்டுவதுடன், அனைவரும் விலங்குகள் மீது கருணை காட்டுவோம்.
அதேபோன்று, வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிங்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுத்தை குட்டிக்கும், தகுந்த உணவுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.