1. Home
  2. தமிழ்நாடு

இன்டியா கூட்டணியை கிழித்தெறிந்த பிரதமர் மோடி !!

1

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ், டி.எம்.சி, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 26 கட்சிகளுடன் Indian National developmental Inclusive Alliance என்ற பொருளில் INDIA என்ற எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த கூட்டமைப்பின் முடிவுகளின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பான பிரச்னை எழுப்பப்படுவதால், இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 4ம் நாள் அமர்வு இன்று தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய பிரதமர்:- 

எதிர்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பார்த்ததே இல்லை எனவும் விமர்சித்தார். அவை முடக்க நடவடிக்கைகளால் எதிர்கட்சியாகவே இருக்க அவர்கள் முடிவு செய்து விட்டார்கள் என தெரிவித்த பிரதமர் மோடி, அதுவே அவர்களின் தலையெழுத்து எனவும் கூறினார்.

தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரிலும், கிழக்கிந்தியக் கம்பெனி என்பதிலும் கூட இந்தியா உள்ளதாகவும் அவர் காட்டத்துடன் கூறினார்.

இந்தியா என்பதை சேர்த்து விட்டால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது எனவும் பிரதமர் கிண்டலுன் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், பாஜக அதனை மேலும் உயர்த்தும் எனவும் அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like