1. Home
  2. தமிழ்நாடு

இன்று வயநாடு வருகிறார் பிரதமர் மோடி...!

1

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் புதைந்தும், அடித்து செல்லப்பட்டும் உள்ளன. நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 400க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் உடல்களைத் தேடும் பணியில் மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் பல பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உறவுகளையும், உடமைகளையும் இழந்து வருந்தி வருகின்றனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகை பிரபலமானது. இந்நிலையில் மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் பார்வையிட்டு சென்றனர். இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்கு இன்று (ஜூலை 10) பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.

காலை 11 மணி அளவில் கண்ணூர் செல்லும் பிரதமர் மோடி, வான் வழியாக நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.

Trending News

Latest News

You May Like