1. Home
  2. தமிழ்நாடு

இன்று புரூனை செல்கிறார் பிரதமர் மோடி..!

1

இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் புரூனையும் இணக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பேணி வருகின்றன. சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா கடந்த 1992 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டார். இவர், 2012 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா நினைவு உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இந்தியாவின் 2018-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவும் கலந்து கொண்டார். அப்போது அவர், இதர ஆசியத் தலைவர்களுடன் இந்திய அரசு விழாவின் தலைமை விருந்தினராக இருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று புருனேவுக்குச் செல்கிறார். சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடியின் இந்த பயணம், இரு நாட்டின் உறவை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்திய பிரதமர் அரசு முறை பயணமாக புருனேவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

புருனேவுக்கும், இந்தியாவுக்குமான உறவானது பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் புதிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்வது உட்பட தற்போதுள்ள அனைத்து துறைகளிலும் பின்னிப் பிணைந்துள்ளது.

அதேபோல், புருனேவை தொடர்ந்து பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். இந்த சந்திப்பில், இந்தியா - சிங்கப்பூர் இடையேயான பல்வேறு துறை ரீதியான கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். பிரதமர் மோடியின் இந்த இருதரப்பு சந்திப்பானது இரு நாடுகளுக்குள்ளான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

Trending News

Latest News

You May Like