நாளை 117 இந்திய வீரர், வீராங்கணைகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி..!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று ஒரு வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் 71-வது இடம் கிடைத்தது. நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கம் கிடைத்தது. மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் வெண் கலம் வென்றார். அதோடு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப் ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற வர லாற்றினை படைத்தார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் பெற்றார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 57 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். ஆக்கியில் வெண்கலம் கிடைத்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை நாளை சுதந்திர தினத்தன்று சந்திக்கிறார். சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு மணி அளவில் 117 வீரர், வீராங்கனைகளை அவர் சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.