நாளை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி நாளை தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும் அவர், பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரெயில் சேவையை பச்சை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு அவர் ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பகல் 3 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அவர் பயணிக்கும் மார்க்கத்தில் சாலைகளுக்கு தார் போடப்பட்டு பளபளவென்று மின்னுகின்றன. பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
.png)