இன்று 3 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்..!
பிரதமரின் 'மேக் இன் இந்தியா', தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் - லக்னோ மற்றும் தமிழகத்தில் மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.
மீரட் - லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகமாகவும் வசதியுடனும் பயணிக்க உலகத்தரம் வாய்ந்த வழிகளை வழங்கும். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும்.