திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் - பிரதமர் மோடி..!

இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 17ம் தேதி அன்று அமைச்சர்கள் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே அவரது உருவப்படத்தை வைத்தும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்.ஜி.ஆர். சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். ஆர்வத்தோடு தொண்டாற்றுவோம், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் நல்லாட்சியை மலரச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம். என பதிவிட்டுள்ளார்.
திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம். pic.twitter.com/tOmi8ZpAlB
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம். pic.twitter.com/tOmi8ZpAlB
— Narendra Modi (@narendramodi) January 17, 2025