ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை..!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில், 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவு மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் அமைகிறது.
தொடர்ந்து, சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.