1. Home
  2. தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி தமிழில் புகழாரம்..!

1

பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்தக்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்.


 

Trending News

Latest News

You May Like