மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்..!!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொதுவாழ்வில் நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகொள்வோம்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.