1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி..!

Q

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் உடல் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

மன்மோகன் சிங் மறைவை ஒட்டி டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை ஏழு நாட்கள் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள மன்மோகன் சிங் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, மன்மோகன் சிங் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். மன்மோகன் சிங் உடலுக்கு நாளை (டிசம்பர் 28) அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

Trending News

Latest News

You May Like