1. Home
  2. தமிழ்நாடு

தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதூர்த்தி விழா: மோடி வழிபாடு..!

1

விநாயகர் சதூர்த்தி விழா கடந்த சனிக்கிழமை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக வீடியோவை பிரதமர் மோடி தனது‛ எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் கலந்துகொண்டேன். விநாயகர் நம் அனைவரையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லம் வந்த பிரதமர் மோடியை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.


 

Trending News

Latest News

You May Like