1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி – ராகுல் திடீர் சந்திப்பு..!

Q

பார்லிமென்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கியது. இந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.,18) பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ராகுலை சந்தித்து பேசினர்.
ஆலோசனையில் அமித்ஷா, ஓம் பிர்லா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like