1. Home
  2. தமிழ்நாடு

பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்!

Q

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு, இரு நாடுகள் தீர்வு காண இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அதே நேரத்தில், காசாவின் மோசமான நிலைமைகுறித்து இந்தியா மீண்டும் மீண்டும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும். காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. காசா- இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண வேண்டும்’ எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுடன் நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like