1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம்..! இன்று மாலை 4 மணி நிறைவு..!

1

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் இன்று (ஜூன் 1) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 7ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார்.

முதல் நாளான நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி அன்று இரவு தொடங்கிய நிலையில் நேற்று (மே.31) 2-வது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்தார். முன்னதாக நேற்று காலை, கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அவர் சூரிய நமஸ்காரண் செய்து வழிபட்டார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபட்டார். தியானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. 2019 தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் இதேபோன்ற தியானப் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையில், நேற்று விவேகானந்தா பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திடீர் அனுமதி வழங்கப்பட்டது. காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் விவேகனந்தா பாறைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போன், உடைமைகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல், அங்கு வருபவர்களின் ஆதார் விவரம் பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முதல் தளத்துக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

பாராளுமன்ற மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார். இன்று (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

Trending News

Latest News

You May Like