1. Home
  2. தமிழ்நாடு

சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Q

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு வட அமெரிக்க நாடான கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன்.

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது. ஒரு இந்தியப் பிரதமரின் முதல் பயணமாக இருக்கும் குரோஷியாவிற்கான எனது பயணம், இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like