1. Home
  2. தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக் அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

Q

17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்தது. பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாராஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவுப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து இருந்தது. கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்தது. அதுவே வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
7 தங்கப்பதக்கம், 9 வெள்ளிப்பதக்கம் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை இந்திய பாராஒலிம்பிக் வீரர்கள் வென்றனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தும் கவுரவித்தது.
இந்நிலையில் பாராஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

Trending News

Latest News

You May Like