சைப்ரஸ் அதிபருக்கு பிரதமர் மோடியின் அன்பு பரிசு..!

5 நாட்கள் அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலில் சைப்ரசில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் III கிராண்ட் கிராஸ் என்ற விருது வழங்கப்பட்டது.
தமது பயணத்தின் போது சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டௌலிடேசுக்கு பிரதமர் மோடி காஷ்மீரில் கைகளால் செய்யப்பட்ட பட்டு கம்பளத்தை பரிசாக வழங்கி உள்ளார்.
நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த கம்பளங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கைவினைக்கலைஞர்களால் நெய்யப்பட்டவை. பாரம்பரியமான சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டவை.
சைப்ரஸ் அதிபரின் மனைவியும், முதல் பெண்மணி என்று அழைக்கப்படுவருமான பிலிப்பா கர்சேராவுக்கு வெள்ளியிலான பணப்பையை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பணப்பை, பாரம்பரிய உலோக வேலைப்பாடுகளைக் கொண்டவை.
இந்த பையின் மையத்தில் நேர்த்தியான தோற்றம் அளிக்கும், வகையில், மதிப்பிட முடியாத கல் பதிக்கப்பட்டுள்ளது.