1. Home
  2. தமிழ்நாடு

மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி உருக்கம்..!

1

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான சூழலில் இருந்து மேலே வந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார். பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவரது தலையீடுகளும் அற்புதமானவையாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.

மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும், தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அரசாங்கம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் வெளிப்படையானவை. துயரமான இந்த தருணத்தில், எனது மன்மோகன் சிங் குடும்பத்தினர், அவரது நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இத்துடன் மன்மோகன் உடனான ஏராளமான புகைப்படங்களையும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like