1. Home
  2. தமிழ்நாடு

அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் - அதானியை கைது செய்யணும் - ராகுல் காந்தி..!

Q

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்,

முறைகேடுகள் செய்யும் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார். அதானி செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உடனடியாக பார்லிமென்ட் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும். முறைகேடு புகாரில் தொடர்புடைய செபி தலைவர் மாதவியையும் பிரதமர் மோடி பாதுகாக்கிறார். அதானியை விரைந்து கைது செய்ய வேண்டும்.

இந்தியாவில் அதானி எப்படி சுதந்திரமாக சுற்றி வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடியை அதானி கட்டுப்படுத்துகிறார். அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் போது, அதானி மீது இந்தியா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் பெற்று இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியின் ஊழலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக அம்பலப்படுவார்கள்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் மீண்டும் மீண்டும் பேசி வருகிறோம். ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் தொழிலதிபர் அதானி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். அதானி ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் மோடியும் உடந்தையாக உள்ளார். அதனால் தான் சாதாரண மனிதரை போல் அதானியால் நாட்டில் நடமாட முடிகிறது. இவ்வாறு ராகுல் கூறினார்

Trending News

Latest News

You May Like