சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி..!
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பிகார் சென்றுள்ளார். அங்கு, (திங்கட்கிழமை) இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருடன் பிரதமர் பாட்னாவில் பிரம்மாண்டமான ரோடு ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PM Modi Ji's participation in serving Langar at Patna Sahib Gurudwara echoes the spirit of seva (selfless service) and inclusivity.
— Sandeep Patil (Modi Ka Parivar) (@Sandeepatil_) May 13, 2024
A heartwarming reminder of our shared values - a simple act, yet profound in its impact. #PMModi #Seva @narendramodi pic.twitter.com/J5Tj2kMSvl